உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தடகளத்தில் தமிழகம் அசத்தல்

கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தடகளத்தில் தமிழகம் அசத்தல்

சென்னை:கேலோ இந்தியா யூத் கேம்ஸ் தடகளப் போட்டி, பீஹார் மாநிலம் பாட்னாவில், கடந்த 12ல் துவங்கி, 14ம் தேதி நிறைவடைந்தது. போட்டியில், நாடு முழுதும் இருந்து, ஏராளமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றனர்.இதில், தமிழக தடகள சங்கம் சார்பில், ஆண்களில் 18 பேரும், பெண்களில் 19 பேரும் பங்கேற்றனர்.அனைத்து போட்டிகள் முடிவில், பெண்களில் 89.5 புள்ளிகள் பெற்று ஹரியானா மாநிலம் முதலிடத்தையும், தமிழகம் 66 புள்ளிகள் பெற்று இரண்டாமிடத்தையும், மகாராஷ்டிரா 61.5 புள்ளிகள் பெற்று மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின.ஆண்களில், உ.பி., மாநிலம் 62 புள்ளிகள், தமிழகம் 59 புள்ளிகள், மகாராஷ்டிரா 54 புள்ளிகள் பெற்று, முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தன.ஒட்டுமொத்தமாக, தமிழகம் 125 புள்ளிகள் பெற்று, ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.தொடர்ந்து, ஹரியானா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள், தலா 111.5 புள்ளிகள் பெற்று, இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களை வென்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !