உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய சர்பிங் சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் அசத்தல்

தேசிய சர்பிங் சாம்பியன்ஷிப் தமிழக வீரர்கள் அசத்தல்

சென்னை, கோவளத்தில், தேசிய அளவில் நடக்கும் 'சர்பிங்' போட்டியில், தமிழகத்தின் கிஷோர், ரமேஷ், சிவராஜ், ஸ்ரீகாந்த், கமலினி ஆகியோர், இரண்டாம் சுற்றுக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். தமிழ்நாடு சர்பிங் சங்கம் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா துறை இணைந்து 'கோவ் லாங் - வாட்டர் பெஸ்டிவல் 2025' எனும் கடற்சார் விளையாட்டு போட்டிகள், சென்னை, கோவளத்தில் நேற்று முன்தினம் துவங்கின. இதில் சர்பிங், படகு பந்தயம் உட்பட நான்கு நீர் விளையாட்டு போட்டிகள் வரும் 21ம் தேதி வரை நடக்கின்றன. 16 வயதுக்கு உட்பட்டோர் மற்றும் ஓப்பன் என, இரு பிரிவில் போட்டி நடக்கிறது. முதல் நாள் சர்பிங் போட்டி ஆடவர் பிரிவில் 53 பேர், பெண்கள் பிரிவில் 19 பேர் பங்கேற்றனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் - 10.00, ரமேஷ் - 9.67, கிஷோர் - 9.33, கமலினி - 7.90, சிவராஜ் - 6.90 ஆகியோர், அந்தந்த பிரிவில் அதிக புள்ளிகள் பெற்று, இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை