உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னை வீல் சேர் டென்னிஸ் அரையிறுதியில் தமிழக வீரர்கள்

சென்னை வீல் சேர் டென்னிஸ் அரையிறுதியில் தமிழக வீரர்கள்

சென்னை :தேசிய அளவில் நடந்து வரும் வீல் சேர் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றில் வெற்றிபெற்ற தமிழகத்தின் மாரியப்பன், கார்த்திக் கருணாகரன், பாலச்சந்தர் ஆகியோர், அரையிறுதிக்குத் தகுதி பெற்றனர். தமிழ்நாடு டென்னி ஸ் சங்கம் மற்றும் இந்தியன் நிறுவனம் இணைந்து, தேசிய அளவில், நான்காவது இந்தியன் ஏ.ஐ.டி.ஏ., டென்னிஸ் தொடரை, நுங்கம் பாக்கம் எஸ்.டி.ஏ.டி., டென்னிஸ் மைதானத்தில் நடத்தி வருகின்றன. இதன் காலிறுதி போட்டி நேற்று நடந்தது. இதன் இரண்டாவது சுற்றில், தமிழகத்தின் மாரியப்பன், கர்நாடகாவின் அணில் டி அல்மைடாவை எதிர்த்து மோதினார். இதில், மாரியப்பன் 9 - 3 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றார். அடுத்து நடந்த போட்டியில், கர்நாடகாவின் சிவபிரசாத்தை, தமிழகத்தின் பாலச்சந்தர் எதிர்கொண்டார். இதில், பாலச்சந்தர் 9 - 2 என்ற செட் கணக்கில் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். கடைசி காலிறுதி போட்டியில், தமிழகத்தின் கார்த்திக் கருணாகரன், கர்நாடகாவின் பாண்டுரங்க சுவாமியை எதிர்த்து மோதினார். இதில், கார்த்திக் 9 - 2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு சென்றார். அதேபோல், ஆடவருக்கான இரட்டையர் போட்டியில், தமிழகத்தின் ஜேம்ஸ் - அருள், மாரியப்பன் - கார்த்திக் கருணாகரன், சேகர் - பாலச்சந்தர் ஜோடி காலிறுதிக்கு தகுதிபெற்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை