ஆசிய மாஸ்டர்ஸ் தடகளம் தமிழக போலீசார் அசத்தல்
சென்னை: ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டியில், தமிழக போலீசார், 33 பதக்க ங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். சென்னை, பெரியமேடு பகுதியில் உள்ள ஜவஹர்லால் நேரு மைதானத்தில், 23வது ஆசியா மாஸ்டர்ஸ் தடகள போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், தமிழக காவல் துறை சார்பில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 68 பேர் பங்கேற்றனர். இவர்கள், 14 தங்கம், ஒன்பது வெள்ளி, 10 வெண்கலம் என, 33 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். தடகள போட்டியில் அசத்திய போலீசாரை, பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் நேற்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.