உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தேசிய பாரா நீச்சல் போட்டி தமிழக அணிக்கு 88 பதக்கம்

 தேசிய பாரா நீச்சல் போட்டி தமிழக அணிக்கு 88 பதக்கம்

சென்னை: இந்திய பாராலிம்பிக் மற்றும் தெலுங்கானா பாரா விளையாட்டு சங்கம் இணைந்து நடத்திய, 25வது தேசிய பாரா நீச்சல் போட்டி, தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகரில் நடந்தது. இதில், 30 அணிகள் பங்கேற்றன. 50 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில், போட்டிகள் நடத்தப்பட்டன. சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகிய வயது பிரிவுகளில், வீரர் - வீராங்கனையர் போட்டியிட்டனர். இதில் தமிழக அணி, 34 தங்கம், 40 வெள்ளி, 14 வெண்கலப் பதக்கங்கள் என, மொத்தம் 88 பதக்கங்களை கைப்பற்றி அசத்தியுள்ளது. தமிழக அணியில், சென்னையைச் சேர்ந்த பூவியாற்றல், ஈசன் சந்தோஷ், லிட்டேஷ் கிருஷ்ணா, முகிலன், சித்தார்த் உள்ளிட்ட வீரர்கள், 13 தங்கம், 9 வெள்ளி, 1 வெண்கலம் என, மொத்தம் 23 பதக்கங்களை கைப்பற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ