உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தனிஷ்க் ஜுவல்லரியின் கண்கவர் வைர கண்காட்சி புதிய திட்டத்துடன் அறிமுகம்

 தனிஷ்க் ஜுவல்லரியின் கண்கவர் வைர கண்காட்சி புதிய திட்டத்துடன் அறிமுகம்

சென்னை: 'த னிஷ்க் ஜுவல்லரி'யின் வைர நகைகள் கண்காட்சியில், வாங்கும் வைர நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. தங்க நகைகளுக்கும் சிறப்பு திட்டம் உள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த 'தனிஷ்க் ஜுவல்லரி' வைர நகைகள் கண்காட்சி, தேனாம்பேட்டை, ஹையாத் ரீஜென்சி ஹோட்டலில், இம்மாதம் 26ல் துவங்கி , இன்றுடன் முடிவடைகிறது. நிறுவனத்தின் பகுதி வர்த்தக மேலாளர் தினேஷ்குமார், பகுதி வணிக மேலாளர்கள் இக்னெசிஸ், ஜெகன் ரவி, ஆதித்தன், ராம் கவுதம், விற்பனை மேம்பாட்டு அதிகாரிகள் ராகவராஜ், முத்துராமன் ஆகியோர், கண்காட்சியை துவக்கி வைத்தனர். விழா சலுகையாக, வைர நகைகளுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. நகைக்கடையின் நிர்வாகிகள் கூறியதாவது: பெண்களுக்கான பிரத்யேக வடிவமைப்புகளை உருவாக்குவதில் தனித்துவமா க விளங்கும் தனிஷ்க் ஜுவல்லரியின் இந்த கண்காட்சியில், உயர் மதிப்புடைய இயற்கை வைரங்களால் உருவாக்கப்பட்ட நகைகள் வைக்கப்பட்டுள்ளன. ரேடியன்ஸ் இன் ரிதம், அன்பவுண்ட் மற்றும் சவுத் இண்டியன் ஸ்டட்டட் போன்ற தனிஷ்க்கின் நேர்த்தியான வடிவமைப்பு, கண்களை கவரும் மற்றும் ஈடு இணையற்ற கைவினைத் திறன் அடங்கிய, வைர நகைகளின் சிறந்த தொகுப்புகள் உள்ளன. வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு வைர நகைக்கும், 20 சதவீதம் வரை தள்ளுபடி கிடைக்கும். அதே போல், தனிஷ்க் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள, மாபெரும் தங்கப் பரிமாற்ற திட்டத்தின் வாயிலாக, பழைய தங்கம், எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டாலும், இங்கு, பூஜ்ஜியம் சதவீத கழிவில் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ