உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் தொட்டி

மழைநீரை வெளியேற்ற ரூ.1.30 கோடியில் தொட்டி

கோடம்பாக்கம்:சென்னை, தென்மேற்கு மாவட்டம், தி.நகர் கிழக்கு பகுதி, 132வது வட்ட தி.மு.க., சார்பில், துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு, 'ஏன் வேண்டும் தி.மு.க.,' என்ற விளக்க உரை கூட்டம், கோடம்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடந்தது.மாவட்ட செயலரும், மயிலாப்பூர் எம்.எல்.ஏ.,வுமான வேலு, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.தி.நகர் எம்.எல்.ஏ., கருணாநிதி பேசியதாவது:மழைக்காலத்தில், கோடம்பாக்கத்தில் பல நாட்கள் தண்ணீர் தேங்குவது, பல ஆண்டு பிரச்னை. அதை தீர்க்க, அப்பகுதியில், பல கோடி ரூபாய் மதிப்பில் வடிகால் அமைத்து, ஒரே நாளில் தண்ணீர் வடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு, துணை முதல்வர் உதயநிதி இரு முறை வந்து சென்றுள்ளார்.அதேபோல், அஜீஸ் நகர், பராங்குசுபுரம் பகுதியில் தேங்கும் மழைநீரை விரைந்து வெளியேற்ற, 1.30 கோடி ரூபாய் மதிப்பில் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, இப்பகுதியின் பிரதான பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை