உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை:மது பாட்டிலுக்கு, 10 ரூபாய்க்கு மேல் கூடுதலாக விற்றால், கடைப்பணியில் உள்ள அனைவரையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வலியுறுத்தி, சென்னை எழும்பூர் டாஸ்மாக் தலைமை அலுவலகம் அருகில், அனைத்து டாஸ்மாக் சங்கங்கள் கூட்டமைப்பு ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:ஆண்டுக்கு, 50,000 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருவாய் ஈட்டி தரும் டாஸ்மாக் மது கடை ஊழியர்கள் குறைந்த சம்பளத்தில் பணிபுரிகின்றனர். அவர்களை, பணிநிரந்தரம் செய்து, அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும். கூடுதல் விலைக்கு மது விற்றால், கடை பணியில் உள்ள அனைத்து ஊழியர்களையும் பணியிடை நீக்கம் செய்யும் உத்தரவை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.தமிழக டாஸ்மாக் மாற்றுத்திறனாளிகள் பணியாளர் நலச்சங்க மாநில செயலர் அரியகுமார் தலைமையில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி ஊழியர்கள், காமராஜர் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் அலுவலகத்திற்குள் அமர்ந்து, பணிநிரந்தரம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று போராட்டம் நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ