உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பள்ளிகளில் பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

பள்ளிகளில் பாதுகாப்பு கோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை, அரசு பள்ளியில் ஆசிரியை கொலை செய்யப்பட்டதை கண்டித்து, மாவட்ட முதன்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு, அரசு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில், சின்னமனை கிராமத்தை சேர்ந்த ரமணி, 25 என்பவர், தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பள்ளிக்கு வந்த மதன்குமார் என்பவர் நேற்று முன்தினம், ஆசிரியை ரமணியை குத்தி கொலை செய்தார்.இந்த சம்பவத்தை கண்டித்து, ஜாக்டோ - ஜியோ சார்பில், அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை எழும்பூரில் உள்ள, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன், ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும்படி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து, ஒருங்கிணைப்பாளர் சத்தியநாதன் கூறியதாவது:அரசு பள்ளிகளில், ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. மாணவர்களை பார்த்து, ஆசிரியர்கள் பயப்பட வேண்டியுள்ளது. பெற்றோரும் சண்டைக்கு வரும் நிலையை மாற்ற வேண்டும். அனைத்து அரசு பள்ளிகளுக்கும் போலீஸ் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை