மேலும் செய்திகள்
அருப்புக்கோட்டையில் மீண்டும் ஆக்கிரமிப்பு
29-May-2025
வியாசர்பாடி, வியாசர்பாடி ரவீஸ்வரர் கோவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான சர்வே எண் 561, பிளாக் எண் 28 ஆகிய இடங்களில், 600 சதுரடி நிலத்தை ஆக்கிரமித்து, 10 ஆண்டுகளுக்கு முன் கோபிநாத், பரந்தாமன் ஆகியோர் கட்டடம் கட்டி இருந்தனர்.கடந்த 2022ல், செப்., 22ம் தேதி, தரைத்தளத்தில் உள்ள ஆக்கிரமிப்பு அப்புறப்படுத்தப்பட்டு, கோவில் வசம் கொண்டு வரப்பட்டது.இந்நிலையில், முதல் தளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆக்கிரமிப்பாளர்கள், கால அவகாசம் கேட்டதால், அறநிலைய துறை அதிகாரிகள், முதல் தளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சென்றனர்.இந்நிலையில், முதல் தளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி பயன்படுத்தி வந்ததால், உதவி கமிஷனர் சிவகுமார், அறநிலையத் துறை வட்டாட்சியர் சத்தியேந்திராஜ், பெரம்பூர் ஆய்வாளர் யுவராஜ், கோவில் நிர்வாக அதிகாரி ஆட்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் ஆகியோர் தலைமையில், முதல் தளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, கோவில் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சொத்தின் மதிப்பு 40 லட்சம் ரூபாய்.
29-May-2025