உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீட்டு வாடகை படியை உயர்த்தி தர கோவில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

வீட்டு வாடகை படியை உயர்த்தி தர கோவில் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

சூளை:தமிழ்நாடு திருக்கோவில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னையில் மாநில செயற்குழு கூட்டம் நடப்பதை முன்னிட்டு, அதன் திட்டமிடல் குறித்து சென்னை கோட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று சூளை, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்தது.இதில், சிறப்பு அழைப்பாளராக மாநில மகளிர் அணி செயலர் செந்தமிழ் செல்வி பங்கேற்று, மாநில செயற்குழு கூட்டம் விழா திட்டமிடல் கூட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.இதில், சென்னையில் நடைபெறும் மாநில செயற்குழு கூட்டத்தை மாநாடு போல நடத்த வேண்டும்; விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வீட்டு வாடகை படி உயர்த்தி வழங்க வேண்டும். தினக்கூலி, தொகுப்பூதிய பணியாளர்களை அரசு பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.அரசு பணியாளர்கள் போன்று திருக்கோவில்களில் உழைக்கும் தற்காலிக தொகுப்பூதிய பெண் பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். குடிநீர், கழிப்பறை வசதி முறையாக செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து, இக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ