உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுவையின் சங்கீதம் செப் தாமு துவக்கம்

சுவையின் சங்கீதம் செப் தாமு துவக்கம்

சென்னை, பிரபல சமையல் வல்லுனர் செப் தாமு, 'சுவையின் சங்கீதம்' எனும் பெயரில், 'கேட்டரிங்' மற்றும் 'ஈவன்ட் மேனெஜ்மென்ட்' நிறுவனத்தை, சென்னையில் நேற்று துவக்கினார்.இதுகுறித்து, செப் தாமு கூறியதாவது:திருமணம் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆரோக்கியம், சுவை நிறைந்த உணவுகளை வழங்கும் நோக்கில், இந்நிறுவனம் துவங்கப்பட்டு உள்ளது. அதுவும் நியாய விலையில், தரமான சேவையுடன் இதை வழங்க இருக்கிறோம்.ஒரே நேரத்தில், 200 முதல் 5,000 நபர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளுக்கு, எங்கள் சேவையை மிக நேர்த்தியாக வழங்க முடியும். இதற்கென, சிறந்த சமையல் வல்லுனர்கள் அடங்கிய 100 பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.இந்தியாவின் எந்த மூலையிலும், எங்கள் சேவையை வழங்கத் தயாராக இருக்கிறோம். வாடிக்கையாளர் தேவைக்கு ஏற்ப, 'பிளாட்டினம், கோல்டு, சில்வர், பிரான்ஸ்' என, நான்கு பிரிவுகளில், இதை முன்னெடுத்துள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !