உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

11 இடங்களில் மழைநீர் தேக்கம் இன்னும் அகற்றுது மாநகராட்சி

சென்னை, சென்னையில் தொடர் கனமழை முடிவுக்கு வந்தும், தாழ்வான 11 இடங்களில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு உள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நான்கு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதற்காக, மாநகராட்சி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும், மழைநீர் வடிகால்களில் குப்பை அடைப்பால், பல்வேறு இடங்களில் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது.இதனால், கடந்த காலங்களில் மழைநீர் தேங்காத பிரதான சாலைகளிலும், இந்தாண்டு மழைநீர் தேங்கியது.குறிப்பிட்ட இடங்களில், குறுகிய நேரத்தில், 20 முதல் 25 செ.மீ., மழை பெய்தது. சென்னையில், சராசரி 15 செ.மீ., மழை பெய்தது. தொடர்ந்து மழை பெய்ததால், 542 இடங்களில் மழை நீர், 4 அடி வரை தேங்கியது.நேற்று முன்தினம் முதல் மழை நின்றதால், நீர் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி, நேற்று மாலை வரை, 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டது. பள்ளிக்கரணை, படாளம், செங்குன்றம் உள்ளிட்ட, 11 இடங்களில் மழைநீர் அகற்றும் பணி தொடர்கிறது.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ''தாழ்வான பகுதிகளில்தான் தற்போது மழைநீர் தேங்கியுள்ளது. அங்கு, மழைநீர் வெளியேற்றும் பணி தொடர்கிறது. விரைவில், அங்கு இயல்பு நிலை திரும்பும்,'' என்றனர்.மழை பாதித்த பகுதிகளில்14,500 டன் குப்பை அகற்றம்சென்னை மாநகராட்சி பகுதியில், 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. மழைநீர் வடிந்த இடங்களில், வெளிமாவட்டங்களை சேர்ந்த, 500 துாய்மை பணியாளர்கள் உட்பட, 24,000 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.அதன்படி, 14ம் தேதி அன்று, 48.33 லட்சம் கிலோ குப்பை, 84,000 கிலோ மரக்கழிவு; 15ம் தேதி 45.24 லட்சம் கிலோ குப்பை, 65,000 கிலோ மரக்கழிவு; 16ம் தேதி 48.46 லட்சம் கிலோ குப்பை, 95,000 கிலோ மரக்கழிவு என, மூன்று நாட்களில் சராசரியாக, 2.44 லட்சம் கிலோ மரக்கழிவு உட்பட, 1.45 கோடி கிலோ குப்பை அகற்றப்பட்டுள்ளன.தொடர்ந்து மரக்கழிவு மற்றும் குப்பை அகற்றும் பணி நடந்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

VASUDEVAN
நவ 08, 2024 15:06

சிறு தூறல் மலை பெய்தால் கூட நாறும்


அப்பாவி
அக் 18, 2024 21:31

சாக்கடைகள், வாய்க்கால்களை அடைச்சிருக்கிற குப்பைகளை எடுத்து சுத்தமா வையுங்க. நாங்க தமிழக தத்திகள் வந்து கண்டதை வாங்கி துண்ணுட்டு பிளாஸ்டிக்கை புதுசா போட்டு அடச்சிருவோம். அடுத்த சீனுக்கு ஃபுல்லா ஜாம் ஆயிடும்.


புதிய வீடியோ