உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  தலைமறைவாக இருந்த கொலையாளி சிக்கினார்

 தலைமறைவாக இருந்த கொலையாளி சிக்கினார்

நொளம்பூர்: அ.ம.மு.க., பிரமுகர் கொலை வழக்கில், தலைமறைவாக இருந்தவர் சிக்கினார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன், 45; அ.ம.மு.க., பிரமுகர். இவரது சகோதரர் மதன் என்பவரை கொலை செய்த, அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் என்பவரை, கடந்த 2021ல் ஜெகன் வெட்டி கொன்றார். ஜாமினில் வெளியே வந்த ஜெகன், சென்னைக்கு குடிபெயர்ந்து, நொளம்பூரில் மீன் கடை நடத்தி வந்தார். கடந்த 2023ல், ஜெகன் அவரது மீன் கடை வாசலில் வைத்து வெட்டி கொல்லப்பட்டார். நொளம்பூர் போலீசாரின் விசாரணையில், அ.தி.மு.க., கவுன்சிலர் ராஜேஷ் கொலைக்கு பழிக்குப்பழியாக கொலை நடந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். ஓராண்டிற்கும் மேலாக தலைமறைவாக இருந்த சீனிவாசன் என்பவர், காஞ்சிபுரத்தில் பதுங்கியிருப்பது தெரிய வர, போலீசார் அவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை