உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் உறங்கியோருக்கு போர்வை வழங்கிய இன்ஸ்பெக்டர்

சாலையோரம் உறங்கியோருக்கு போர்வை வழங்கிய இன்ஸ்பெக்டர்

வண்ணாரப்பேட்டைசென்னை, வண்ணாரப்பேட்டை காவல் நிலைய சட்டம் - ஒழுங்கு பிரிவு ஆய்வாளராக இருப்பவர் முகமது புகாரி. சாலையோரம் தொழிலாளர்கள் குளிரில் படுத்து உறங்கி கஷ்டப்படுவதை, புகாரி பார்த்துள்ளார்.இதையடுத்து, வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பார்த்தசாரதி மேம்பாலத்தில், நேற்று அதிகாலை 3:00 மணியளவில் ரோந்து பணியில் இருந்த போது, சாலையோரம் குளிரால் நடுங்கியபடி உறங்கிக் கொண்டிருந்த 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு, போர்வைகள் வழங்கினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதை தொடர்ந்து, பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர். முகமது புகாரி, எஸ்பிளனேடு இன்ஸ்பெக்டராக முகமது புகாரி பணிபுரிந்த போது, கடந்த டிச., 4ம் தேதி ஏற்பட்ட மழை வெள்ளத்தில் உயிரிழந்தவரை மீட்டு, தனது வாகனத்தில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ