உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது

வங்கி மேலாளரிடம் செயின் பறித்தவர் கைது

சென்னை, விருகம்பாக்கம், காந்தி நகரைச் சேர்ந்தவர் ரேவதி, 38; அண்ணா சாலையில் உள்ள ஐ.ஓ.பி., வங்கி மேலாளர். நேற்று முன்தினம் இரவு, கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது, மர்மநபர் அவரது 4.5 சவரன் செயினை பறித்து தப்ப முயன்றார். சுதாரித்த ரேவதி, பொதுமக்கள் உதவியுடன் செயின் பறிப்பில் ஈடுபட்டவரை பிடித்து, கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெலிக்ஸ், 30, என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை