மேலும் செய்திகள்
குட்கா விற்ற மூவர் கைது
08-Oct-2024
திரு.வி.க.நகர்: பெரம்பூர் ஜார்ஜ் காலனி பகுதியை சேர்ந்தவர் அய்யம்பாண்டியன், 44. இவர் வீட்டருகே, 17 ஆண்டுகளாக மளிகை கடை நடத்தி வருகிறார்.நவ. 1ம் தேதி இரவு இவரது மளிகை கடைக்கு சென்ற பெரம்பூரை சேர்ந்த 'பெல்' என்கிற கமலக்கண்ணன்,39 என்ற ரவுடி, 100 ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார்.ஏற்கனவே, இதேபோல் ஐந்து முறை மிரட்டி பணம் வாங்கிச் சென்றுள்ளார். அதனால், இம்முறை பணம் தர அய்யம்பாண்டியன் மறுத்தார். ஆத்திரமடைந்த ரவுடி, கடையில் இருந்த கண்ணாடி பாட்டில்களை தெருவில் துாக்கிப் போட்டு உடைத்து ரகளை செய்துள்ளார். இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு அய்யம்பாண்டியன் தகவல் அளித்தார். திரு.வி.க.நகர் போலீசார், அங்கு சென்று கமலக்கண்ணனை கைது செய்தனர். அவர் மீது ஏற்கனவே 18 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
08-Oct-2024