உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தனி அறையில் கூட்டம் நடத்தும் நகராட்சி தலைவர்

தனி அறையில் கூட்டம் நடத்தும் நகராட்சி தலைவர்

திருவேற்காடு, திருவேற்காடு நகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கடந்த மாதம் கவுன்சிலர்கள் கூட்டம் நடக்காத நிலையில், நகராட்சி கூட்டரங்கின் நேற்று நடந்தது. இதில், 47 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்தில் கவுன்சிலர்களின் கருத்துக்களை, திருவேற்காடு நகராட்சி தலைவரான தி.மு.க.,வைச் சேர்ந்த மூர்த்தி மற்றும் ஆணையர் தட்சணாமூர்த்தி கேட்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.தனக்கு ஆதரவான கவுன்சிலர்களுடன், தன்னுடைய அறையிலேயே தனி கூட்டத்தை நகராட்சி தலைவர் மூர்த்தி முன்கூட்டியே கூட்டிவிடுவதாகவும், இதனால், கண்துடைப்புக்கு கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்துவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்களே அதிருப்தி தெரிவித்துள்ளனர்.பல மாதங்களாக, கூட்டத்திற்கு செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பரம ரகசியமாக கூட்டத்தை நடத்தி முடித்து விடுகின்றனர் என்றும், இதனால், கூட்டத்தில் மக்கள் பிரச்னை விவாதிக்கப்படுகிறதா என்பதே தெரியவில்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !