உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய கால்பந்து போட்டி 30 அணிகள் பலப்பரீட்சை

தேசிய கால்பந்து போட்டி 30 அணிகள் பலப்பரீட்சை

சென்னை:சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டியில், துபாய் உட்பட பல்வேறு பகுதியில் இருந்து, 30 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன.ஆர்.எம்.கே., ரெசிடென்ஷியல் சீனியர் பள்ளி சார்பில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையிலான தேசிய கால்பந்து போட்டி, திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில், நேற்று காலை துவங்கியது.இதில் சென்னை, துபாய் உட்பட ஒன்பது மண்டலங்களில் இருந்து வெற்றி பெற்ற அணிகள் உட்பட, மொத்தம் 30 பள்ளி அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள் 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடக்கின்றன.நேற்று காலை துவங்கிய முதல் நாள் போட்டியை, முன்னாள் இந்திய கால்பந்து வீராங்கனை ஷாலினி, ஆர்.எம்.கே., கல்வி நிறுவனர் முனிரத்தினம் உள்ளிட்டோர் துவக்கி வைத்தனர். போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயதிற்கு உட்பட்ட மூன்று பிரிவுகளில், தனித்தனியாக நடக்கின்றன.இதில், 19 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் டில்லி மாடல் பள்ளி அணி, 5-0 என்ற கணக்கில், சத்தீஸ்கர் எம்.ஜிஎம்., பப்ளிக் பள்ளியை தோற்கடித்தது.மற்றொரு போட்டியில் உத்தரப்பிரதேசம் ஆர்மி பப்ளிக் பள்ளி, 2 - 0 என்ற கணக்கில், ஓமன் நாட்டின் இந்தியன் பள்ளி அணியை தோற்கடித்தது.போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !