| ADDED : பிப் 20, 2024 12:39 AM
மதுரவாயல், கோயம்பேடில் இருந்து கிளாம்பாக்கம் செல்லும் தடம் எண்: 104 அரசு பேருந்து, மதுரவாயல் - பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக, நேற்று முன்தினம் இரவு சென்றது.பேருந்தை, அம்பத்துாரைச் சேர்ந்த மணிகண்டன், 45, என்பவர் ஓட்டிச் சென்றார். மதுரவாயல் அடுத்த ஏரிக்கரை பேருந்து நிறுத்தத்தில் பயணியர் காத்திருந்தனர்.பேருந்து ஏரிக்கரை பஸ் நிறுத்தத்தில் நிற்காமல், சிறிது துாரம் தள்ளி நின்றது. இதனால் ஆத்திரமடைந்த பயணி ஒருவர் சாலையில் கிடந்த கல்லை எடுத்து வீசியதில், பேருந்தின் பின்பக்க கண்ணாடி நொறுங்கியது.பின், அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து பேருந்து ஓட்டுனர் மணிகண்டன், மதுரவாயல் போலீசில் புகார் அளித்தார்.கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்தனர். இதில், பேருந்தின் கண்ணாடியை உடைத்தது, மதுரவாயல் லட்சுமி நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் சதீஷ் குமார், 30, என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில், மது போதையில் இருந்ததால் பேருந்து மீது கல் வீசியதாக அவர் போலீசாரிடம் தெரிவித்தார்.