உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / உடன் தங்கியிருந்தவர் ரூ.1,000த்துடன் ஓட்டம்

உடன் தங்கியிருந்தவர் ரூ.1,000த்துடன் ஓட்டம்

சேலையூர், தேனி, உத்தமபாளையத்தை சேர்ந்தவர் ஹரிஹரன், 28. சேலையூரை அடுத்த பதுவஞ்சேரியில் தங்கி, மண்ணிவாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் வேலை செய்து வந்தார். அவருடன், அதே பகுதியை சேர்ந்த ஷேக் முகமது, 28, என்பவர் தங்கியிருந்தார். நேற்று காலை, எழுந்து பார்த்தபோது, உடன் தங்கியிருந்த ஷேக் முகமது இல்லை. மேலும், தன் பர்சில் இருந்த, 10,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவை திருடு போனது தெரியவந்தது. இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை இருந்ததாகவும், அதனால், பணத்தை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. சேலையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ