உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்

3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு விபரம் மீண்டும் மாறியது; 55.94 சதவீதமே பதிவானதாக புது பட்டியல்

சென்னை மாவட்டத்தின் மூன்று லோக்சபா தொகுதிகளில், 55.94 சதவீத ஓட்டுகளே பதிவாகி உள்ளதாக, தேர்தல் கமிஷன் இறுதிப் பட்டியல் வெளியிட்டுள்ளது. ஓட்டுப்பதிவு நாளன்று வெளியிடப்பட்ட 68.14 சதவீதத்திற்கும், நேற்று வெளியானதில் குறிப்பிட்டுள்ள 55.94 சதவீதத்திற்கும் இடையே பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது. தொழில்நுட்ப உதவியுடன் ஓட்டுப்பதிவு நடந்துள்ள நிலையில், அவற்றை கணக்கிடுவதில் குளறுபடி நிகழ்ந்துள்ளது. இந்த நிலையில், பயிற்சியற்ற தேர்தல் அலுவலர்களால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை மாவட்டத்தில், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை ஆகிய மூன்று லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் நா.த.க., வேட்பாளர் உட்பட 107 போட்டியிட்டனர்.இந்த தேர்தலில், 48.69 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட தகுதி உடையவர்களாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. ஓட்டுப்பதிவு நாளில், பல ஓட்டுச்சாவடிகளில் இயந்திரம் பழுது, மெதுவாக பணி செய்யும் ஊழியர்களால் வாக்காளர்கள், போலீசார் இடையே வாக்குவாதம் நடந்தது.மேலும், ஒரே வீட்டில் ஐந்து பேரில் ஒன்று, இரண்டு பேருக்கு ஓட்டு இல்லை என தெரியவந்ததால், பல ஓட்டுச்சாவடிகளில் தகராறு ஏற்பட்டது.பல தேர்தல்களில் ஓட்டளித்து வந்த வாக்காளர்கள், இந்த தேர்தலில், பட்டியலில் தங்கள் பெயர் இல்லாததால் ஓட்டளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.இது ஒருபுறமிருக்க, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், மாநில தேர்தல் கமிஷன் வெளியிட்ட ஓட்டுப்பதிவு சதவீதமும், முரண்பாடாக இருந்தது.ஓட்டுப்பதிவு நாளன்று, சென்னை மாவட்டத்தில், 68.14 சதவீதம் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது.நேற்று முன்தினம், மாநில மற்றும் தேர்தல் அதிகாரிகள், சென்னை மாவட்டத்தில் பதிவாக ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட்டனர். அதில், 56.10 சதவீதம் என தெரிவிக்கப்பட்டது. இது, கடந்த லோக்சபா தேர்தலைவிட, 4 சதவீ தம் குறைவு என அறிய முடிந்தது.இந்நிலையில் நேற்று, மாவட்ட, மாநில தேர்தல் அதிகாரிகள், ஒரு பட்டியலை வெளியிட்டனர். அதில், சென்னை மாவட்டத்தில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம், 55.94 என குறிப்பிடப்பட்டு உள்ளது.முந்தைய தேர்தல்களில், உதாரணமாக, ஓட்டுப்பதிவு நாளன்று, 65 சதவீதம் என அறிவித்தால், அடுத்த நாள் இறுதிப்பட்டியல் வெளியிடும்போது, 67, 68 சதவீதம் என ஓட்டுப்பதிவு அதிகரித்து காணப்படும்.ஆனால் இந்த தேர்தலில், முதலில் 68.14 சதவீதம் எனவும், நேற்று முன்தினம் 56.10 சதவீதம் எனவும், நேற்று 55.94 சதவீதம் எனவும் அறிவிக்கப்பட்டது. இது, வழக்கமான நடைமுறையைவிட மாறாக உள்ளது. இதனால், தேர்தல் கமிஷனின் பணிகளில் வாக்காளர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, வாக்காளர்கள் கூறியதாவது:ஓட்டுகள், தகவல் தொழில்நுட்ப இயந்திரங்கள் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது. இதன் விபரங்கள், கணினி வாயிலாக கணக்கிட்டு வெளியிடப்படும். கணினி பயன்பாட்டுக்கு முன், பட்டியல் வெளியிடுவதில் தவறு நடப்பது சகஜம்.தேர்தல் பணிக்கு புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தியும் குளறுபடி ஏற்படுவது, தேர்தல் கமிஷனின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. தேர்தல் கமிஷன் நம்பகத்தன்மையுடன் செயல்படுவது மிக முக்கியம்.இவ்வாறு அவர்கள் கூறினர். தேர்தல் பணியில் ஈடுபட்ட அனுபவம் வாய்ந்த சில ஊழியர்கள் கூறியதாவது: சில ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு, போதிய அனுபவம் இல்லை. ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர்கள், மூன்று நாள் பயிற்சி பெற்றும், முறையாக ஓட்டுப்பதிவை கையாள முடியாமல் திணறினர்.ஓட்டுப்பதிவு குறித்த விபரத்தை, மேல் அதிகாரிகளிடம் கூறியதில் காலதாமதம், கடைசி நேர பதிவை கணக்கிட்டு மொத்தமாக தெரிவித்ததில் குளறுபடி போன்ற காரணங்களால், முழுமையான பட்டியல் வெளிவரவில்லை.சட்டசபை தொகுதியில் சில உதவி தேர்தல் அலுவலர்கள், ஊழியர்களின் அலட்சியம் காரணமாக இருந்தது. அதனாலேயே, சென்னை மாவட்ட ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிடுவில் குழப்பம் ஏற்பட்டது. இது போன்ற குளறுபடிகள், அடுத்த தேர்தலில் ஏற்படாத வகையில், தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

மூன்றாம் பாலினத்தவர்கள் ஓட்டுப்பதிவு குறைவு!

சென்னை மாவட்டத்தில், 1,462 மூன்றாம் பாலினத்தவர் ஓட்டு போட தகுதி உடையவர்கள். இதில், 379 பேர் தான் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். கடந்த லோக்சபா தேர்தலில், தென்சென்னை தொகுதியில் மூன்றாம் பாலினத்தவர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில், அவர்கள் போட்டியிடவில்லை.

பெண்கள் அதிக ஓட்டுப்பதிவு

மூன்று லோக்சபா தொகுதியில் உள்ள, 18 சட்டசபை தொகுதிகளில், ஆர்.கே.நகர் தொகுதியில், ஆண்களைவிட, 3,338 பெண்கள் அதிகமாக ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், ஆயிரம்விளக்கு தொகுதியில், ஆண்களைவிட, 149 பெண்கள் அதிகமாக ஓட்டுப்பதிவு செய்தனர். மீதமுள்ள, 16 தொகுதிகளில் பெண்களைவிட, அதிக ஆண்கள் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர்.

சட்டசபை தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு விவரம்

வடசென்னை லோக்சபா தொகுதிதொகுதிகள் வாக்காளர்கள் -ஆண் பெண் மூன்றாம் பாலினம் ஓட்டுப்பதிவு -ஆண் பெண் மூன்றாம் பாலினம் சதவீதம்திருவொற்றியூர் 1,36,212 1,40,412 144 87,468 86,474 40 62.86ஆர்.கே.நகர் 1,17,105 1,25,849 114 79,509 82,847 31 66.81பெரம்பூர் 1,39,583 1,44,358 81 86,862 84,763 35 60.44கொளத்துார் 1,38,075 1,44,756 72 80864 78,952 8 56.49திரு.வி.க.நகர் 1,05,278 1,11,465 62 61,341 60,294 19 56.11ராயபுரம் 94,142 98,446 70 55,290 54,557 16 57.02மொத்தம் 7,30,395 7,65,286 543 4,51,334 4,47,884 149 60.11தென்சென்னை லோக்சபா தொகுதிமயிலாப்பூர் 1,27,876 1,35,954 45 69,506 69,409 5 52.65சைதாப்பேட்டை 1,32,211 1,37,039 84 72,371 71,325 30 53.36தி.நகர் 1,14,363 1,17,514 47 62,685 61,501 12 53.55விருகம்பாக்கம் 1,39,213 1,40,804 88 76,278 74,980 9 54.00வேளச்சேரி 1,53,150 1,57,058 81 4,266 84,212 5 54.30சோழிங்கநல்லுார் 3,34,038 3,33,449 119 1,86,983 1,82,415 34 55.34மொத்தம் 10,00,851 10,21,818 464 5,52,089 5,43,842 95 10,96,026 54.17Galleryமத்திய சென்னை லோக்சபா தொகுதிவில்லிவாக்கம் 1,17,952 1,22,492 63 65,604 63,931 7 53.86எழும்பூர் 94,753 96,520 63 55,494 53,419 17 56.93துறைமுகம் 90,529 83,960 64 49,419 43,389 19 53.18சேப்பாக்கம் 1,14,835 1,19,018 59 64,289 62,277 30 54.12ஆயிரம்விளக்கு 1,14,936 1,20,266 106 61,281 61,430 32 52.16அண்ணாநகர் 1,34,460 1,39,985 100 74,573 73,373 30 53.90மொத்தம் 6,67,465 6,82,241 455 3,70,660 3,57,819 135 53.96

3 தொகுதிகளின் ஓட்டுப்பதிவு சதவீத விபரம்

தொகுதி ஏப்., 19 ஏப்., 20 ஏப்., 21வடசென்னை 69.26 60.13 60.11தென்சென்னை 67.82 54.27 54.17மத்திய சென்னை 67.35 53.91 53.96- -நமது நிருபர் --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

suriyanarayanan
ஏப் 23, 2024 08:43

இனியாவது வோட்டு சதவிகிதம், ஓட்டு சாவடியில் பெயர் இல்லை, ஒரே வீட்டில் ஒரூவருக்கு ஓட்டு மற்றவர்களுக்கு ஓட்டு இல்லை என்ற நிலை மாற வேண்டும் தொழில் நுட்பம் வளர்ந்து உள்ளது, கணினி காலத்தில் இப்படி நடக்க கூடாது, அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள் சதவிகிதம் தருபவர்கள், பள்ளி மாணவர்கள் தேர்வில் சதவிகிதம் தருபவர்கள் ஆகையால் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலமாக தேர்தல் தேதிக்கு முன் பூத் சிலிப்பு கொடுக்கலாம் ரேஷன் கார்டு மற்றும் ஆதார் அட்டை இணைக்க வேண்டும் ரேஷன் கடைகள் முலம் இப்போதே இந்த வேலையை தொடங்க வேண்டும் அந்த ரேஷன் கார்டு தார்களுக்கு போன் நம்பரூக்கு எஸ்எம்எஸ் செய்திகள் இரு மொழிகளில் ஆங்கிலம்,தமிழ் குறுஞ்செய்தி முலம் வாக்காளர் எண், பூத்து சிலிப்பு நம்பர் போன்ற தகவல்கள் கொடுக்க வேண்டும் நன்றி


ديفيد رافائيل
ஏப் 22, 2024 23:11

இன்னொரு முறை vote percentage change பண்ணுவானுக பொறுத்திருந்து பாருங்க


Sriniv
ஏப் 22, 2024 13:17

Every day a new figure and a new excuse for the revised values We are fed up with this incompetence and inefficiency Nnoone is ready to believe the story that employees were not trained in the polling process Bluffing


Jysenn
ஏப் 22, 2024 08:21

He is incapable of calculating the percentage of votes polled even after four days The only thing he was good at was abetting and connivance while the money was distributed for votes by dmk and admk ly and freely The ECI should take action against him for negligence and dereliction of duties


pandit
ஏப் 22, 2024 07:17

தமிழ்நாடு தேர்தல் ஆணையம் திராவிஷத்திற்கு துணை போகிறதோ


மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ