வீடு புகுந்து திருட முயன்ற ரவுடி கைது
வியாசர்பாடி:வியாசர்பாடி, தேசிங்கானந்தபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் மாறன், 30. இவர் தன் வீட்டருகே உள்ள அண்ணன் வீட்டில், நேற்று அதிகாலை 5:00 மணியளவில், திருடன் நுழைந்ததாக காவல் கட்டுப்பாட்டறைக்கு தகவல் தெரிவித்தார்.மேலும், சுதாரித்தவர் மர்ம நபர் வெளியேறாமல் இருக்க கதவை வெளியில் இருந்து பூட்டினார்.அதேநேரம், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வியாசர்பாடி போலீசார், வீட்டில் திருட முயன்ற பேசின்பாலம் காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான புளியந்தோப்பு, சுந்தரபுரம் 3வது தெருவைச் சேர்ந்த ரவுடி 'வால்குரங்கு' பிரசாந்த், 28, என்பவரை கைது செய்தனர். இவர் மீது, பேசின்பாலம் காவல் நிலையத்தில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.