உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஜாமினில் வெளிவந்த ஏழு ரவுடிகள் கைது எதிரியை தீர்த்து கட்ட சுற்றியது அம்பலம்

ஜாமினில் வெளிவந்த ஏழு ரவுடிகள் கைது எதிரியை தீர்த்து கட்ட சுற்றியது அம்பலம்

திருமங்கலம், அண்ணா நகர், தங்கம் காலனி இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45. இவரது மனைவி நதியா, 41; வழக்கறிஞர். இவர், பா.ஜ.,வில் மகளிர்அணி மாநில பொதுச் செயலராக உள்ளார்.சீனிவாசனை, அண்ணா நகர் அருகில், ஆட்டோவில் வந்த மர்ம கும்பல், கடந்த ஜூன் 14ம் தேதி வெட்டி தப்பியது. இந்த வழக்கில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், 26, உட்பட ஏழு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.விசாரணையில், யானைகவுனியைச் சேர்ந்த நெடுஞ்செழியன் என்பவர் 2005ல் கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய சீனிவாசனை பழித்தீர்க்க, 19 ஆண்டுகளுக்கு பின் அவரை வெட்டியது தெரிந்தது. இதற்கிடையில், காயமடைந்த சீனிவாசன் குணமாகி வீடு திரும்பினார்.சீனிவாசனை வெட்டிய வழக்கில், சிறைக்கு சென்ற ஏழு பேரும், கடந்த 16ம் தேதி ஜாமினில் வந்துள்ளனர். பழிக்குப்பழி சம்பவத்தில் எதிரி உயிர் பிழைத்ததால், மீண்டும் தீர்த்து கட்ட திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, ஜாமினில் வந்தவர்கள், திருமங்கலம், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் வலம் வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.இந்நிலையில், சவுகார்பேட்டையைச் சேர்ந்த பிரசாந்த், கார்த்திக், 29, ராஜேஷ், 36, நரேந்திரன், 29, உட்பட ஏழு பேரை, ஜெ.ஜெ., நகர் போலீசார், நேற்று முன்தினம் இரவு கைது செய்து, மீண்டும் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ