லிப்ட் கொடுத்து காய்கறி பை வழிப்பறி
செம்பியம்:கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், வெங்கடபுரத்தைச் சேர்ந்தவர் சக்திவேல், 40; தனியார் நிறுவன ஊழியர். இவர், மணலியில் உள்ள தங்கை புஷ்பலதா வீட்டிற்குச் செல்ல, நேற்று அதிகாலை பெரம்பூர் ரயில் நிலையம் வந்தார். பெரம்பூரில் இறங்கி, மூலக்கடைக்கு நடந்து செல்லும் வழியில், 'பைக்'கில் வந்த மர்ம நபர்கள், அவரை மூலக்கடையில் இறக்கி விடுவதாக கூறியுள்ளனர். அவரும் நம்பி பைக்கில் ஏறியுள்ளார். சிறிது துாரம் சென்ற நிலையில், மர்ம நபர்கள் அவரை சரமாரியாக தாக்கி, கையில் வைத்திருந்த பட்டாசு மற்றும் காய்கறி பையை பறித்துச் சென்றனர். தகவலறிந்த ரோந்து போலீசார், காயமடைந்த சக்திவேலை மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து, வீட்டிற்கு அனுப்பினர். வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.