மேலும் செய்திகள்
அரும்பாக்கத்தில் தேங்கும் குப்பையால் நெரிசல்
16-Sep-2025
அரும்பாக்கம்: ஆமை வேகத்தில் கூவம் தரைப்பாலம் பணி நடப்பதால், சூளைமேடு, அரும்பாக்கம் பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட 106 - 107வது வார்டு அரும்பாக்கம் அருகில், சூளைமேடு பாரி தெரு வழியாக விருகம்பாக்கம் கால்வாய் செல்கிறது. நெற்குன்றத்தில் துவங்கும் இக்கால்வாய் அரும்பாக்கம், சூளைமேடு, எம்.எம்.டி.ஏ., காலனி வழியாக, அமைந்தகரை கூவத்தில் கலக்கிறது. சூளைமேடு, பத்மநாப நகர், தமிழர் வீதியில் செல்லும் இக்கால்வாயில் கடந்த சில மாதங்களாக, பழைய தரைப்பாலத்தை இடித்து, புதிதாக கட்டும் பணி நடக்கிறது. பணி துவங்கி பல மாதங்களாகியும், ஆமை வேகத்தில் நடப்பதால் மக்கள் கடும் அவதியடைக்கின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: விருகம்பாக்கம் கூவம் தரைப்பாலம் குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியான பின், ஆறு தரைப்பாலங்கள் கட்டும் பணிகளை மாநகராட்சி கையில் எடுத்தது. முதற்கட்டமாக, மூன்று பணிகளை துவங்கியது. அதில், சூளைமேடு மாதா கோவில் தெரு கூவம் தரைப்பாலம் 80 சதவீத பணிகள் முடிந்துள்ளன. அதேபோல், தமிழர் வீதி கூவம் தரைப்பால பணிகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. இப்பணிக்காக எம்.எம்.டி.ஏ., காலனி, அரும்பாக்கத்திற்கு செல்லும் முக்கிய பிரதான சாலை அடைக்கப்பட்டதால், அரும்பாக்கம், சூளைமேடு மக்கள் பல கி.மீ., சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலத்தில் இக்கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, இப்பகுதியில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.
16-Sep-2025