உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாங்கியவரிடம் ஆட்டை யானைகவுனி திருடர் கைது

துாங்கியவரிடம் ஆட்டை யானைகவுனி திருடர் கைது

யானைகவுனி:சவுக்கார்பேட்டை, முல்லா தெருவைச் சேர்ந்தவர் அருள், 24; திருமண நிகழ்ச்சிக்கு அலங்கார வேலை பார்ப்பவர்.வீட்டில், கடந்த 13ம் தேதி துாங்கியபோது, இவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்து 26,000 ரூபாய், மொபைல் போன் ஆகியவை திருடு போயின.யானைகவுனி போலீசார் விசாரணையில், யானைகவுனி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய தினேஷ், 26, இந்த திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது.நேற்று, தினேஷை கைது செய்த போலீசார், அருளின் மொபைல்போன் மற்றும் 8,500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ