உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அழகு நிலையத்தில் மப்பில் துாங்கிய திருடன்

அழகு நிலையத்தில் மப்பில் துாங்கிய திருடன்

அமைந்தகரை, அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில், 'கிரீன் டிரெண்ட்ஸ்' அழகு நிலையம் இயங்கி வருகிறது. ஊழியர்கள் நேற்று காலை கடை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது; பொருட்கள் சிதறிக்கிடந்தன. லேப் - டாப் உடைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அமைந்தகரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நிலையத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, மாடியில் இருந்து 'கொர்...' என, குறட்டை விடும் சத்தம் கேட்டது.மாடிக்கு சென்று பார்த்தபோது, மது பாட்டில்களுடன் ஒருவர், 'ஹாயாக' குறட்டை விட்டு துாங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி விசாரித்தனர். அதில், சேத்துப்பட்டைச் சேர்ந்த கிஷோர், 24, என்பதும், நள்ளிரவில் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரிந்தது. பணம் எதுவும் கிடைக்காத நிலையில், போதையில் மாடியில் துாங்கியது விசாரணையில் தெரிந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ