ஐஸ்கிரீம் கடையில் திருடர்கள் கைவரிசை
கொளத்துார், கொளத்துார், பாலகுமாரன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மாதவன், 51; எஸ்.ஆர்.பி., காலனி பேப்பர் மில்ஸ் சாலையில் ஐஸ்கிரீம் கடை நடத்தி வருகிறார்.நேற்று முன்தினம் இரவு கடையை பூட்டி சென்றவர், நேற்று காலை வந்தபோது, கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.கடையின் கண்காணிப்பு கேமராவில், 'டியோ' ஸ்கூட்டர் வாகனத்தில் வந்த இருவர், ஷட்டரை உடைத்து பணத்தை எடுத்து சென்றது தெரிந்தது. 20,000 ரூபாய் திருடுபோனதாக, பெரவள்ளூர் போலீசாரிடம் மாதவன் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.