உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூன்றாவது மாஸ்டர் பிளான் வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு

மூன்றாவது மாஸ்டர் பிளான் வரைவு திட்ட அறிக்கை ஜன., 14ல் வெளியீடு

சென்னை, ''சென்னை பெருநகர் பகுதிக்கான மூன்றாவது முழுமை திட்டத்தின் வரைவு அறிக்கை, வரும் ஜன., 14ல் வெளியிடப்படும்,'' என சி.எம்.டி.ஏ., தலைவரும், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான சேகர்பாபு தெரிவித்தார். சென்னை கோயம்பேடு அங்காடி நிர்வாக குழுவுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட இணையதளத்தை, அமைச்சர் சேகர்பாபு நேற்று துவக்கி வைத்தார். அப்போது, சேகர்பாபு கூறியதாவது: கோயம்பேடு சந்தையில் உள்ள, 3,000க்கும் மேற்பட்ட கடைகள் தொடர்பான பராமரிப்பு கட்டணம், விலை நிர்ணய பணிகள் இனி ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும். கோயம்பேடு சந்தை வளாகத்தில், நாளை முதல் அக்., 5 வரை ஆயுத பூஜையை முன்னிட்டு சிறப்பு சந்தை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன. சென்னை பெருநகருக்கான மூன்றாவது முழுமை திட்டம் தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இதன் வரைவு அறிக்கை, ஜன., 14ல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !