உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளுவர் கோவில் பணி ரூ.15.5 கோடியில் துவக்கம்

திருவள்ளுவர் கோவில் பணி ரூ.15.5 கோடியில் துவக்கம்

சென்னை, சென்னை, மயிலாப்பூர் திருவள்ளுவர் கோவில், 61,774 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதைத்தொடர்ந்து, பொற்றாமரை குளம் மேம்பாடு, தரைத்தளம், புதிய கர்ப்பகிரகம் ஆகியவற்றை கருங்கல்லில் அமைத்தல், பிரகார மண்டபம், திருவள்ளுவர் பிறந்த இடத்திற்கு கருங்கல்லில் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.ஏகாம்பரேஸ்வரர் சன்னிதி மற்றும் மஹா மண்டபம், காமாட்சியம்மன், கருமாரியம்மன், பைரவர், ஆஞ்சநேயர், சண்டிகேஸ்வரர், நடராஜர், நவக்கிரக சன்னிதி ஆகியவை கட்டப்பட உள்ளன. இதற்கு, மொத்தமாக 15.4 கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. இப்பணிகளை, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, முதல்வர் ஸ்டாலின் நேற்று துவக்கி வைத்தார். அப்போது, ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலர் முருகானந்தம், அறநிலையத் துறை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர் உடன் இருந்தனர்.

அவசரம் ஏன்?

தமிழக பா.ஜ., அறிக்கை:தி.மு.க., அரசுக்கு, ஹிந்துக்களின் புனித வழிபாட்டு தலமாக இருக்கும், திருவள்ளுவர் கோவிலை மட்டும் இடித்து கட்ட ஏன் இந்த அதிவேகம்.புனரமைப்பு என்ற பெயரில், திருவள்ளுவரின் ஹிந்து பண்பாட்டு அடையாளங்களை குலைத்து விடலாம் என்ற திட்டம் ஏதேனும் இருந்தால், அதை இப்போதே கைவிட்டு விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை