உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது

திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது

சென்னை: 'திருவேற்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தை மூடக்கூடாது; இருக்கும் இடத்திலேயே தொடர்ந்து செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும்' என, பா.ம.க., தலைவர் அன்புமணி கூறியுள்ளார். அவரது அறிக்கை: திருவேற்காடு காடுவெட்டி பகுதியில், 1967-ம் ஆண்டு முதல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. திருவேற்காடு நகரை சுற்றியுள்ள, 20க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயனடைந்து வருகின்றனர். காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, மக்களிடம் வரவேற்பு கிடைத்ததால், அதை நகரப்புற ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றும் நோக்குடன், 2022-ம் ஆண்டில், 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தை, 7 கி.மீ., தொலைவில் நுாம்பல் பகுதியில் புலியம்பேடு பகுதிக்கு மாற்ற தி.மு.க., அரசு முடிவு செய்துள்ளது. அங்கு, புதிதாக நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. நீண்ட தொலைவு, போக்குவரத்து வசதியும் இல்லை; சாலை வசதியும் இல்லை. எனவே, காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம், இப்போது இருக்கும் இடத்தில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்க வேண்டும். அதற்கு கூடுதல் நிதி ஒதுக்கி மேம்படுத்த வேண்டும். நுாம்பல் புலியம் பேடில் கட்டப்பட்டுள்ள புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் தனித்து செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ