உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவொற்றியூர் கிளை நுாலக 95வது சிந்தனை சாரல் நிகழ்ச்சி

திருவொற்றியூர் கிளை நுாலக 95வது சிந்தனை சாரல் நிகழ்ச்சி

திருவொற்றியூர்:திருவொற்றியூர் கிளை நுாலக வாசகர் வட்டம் சார்பில், 95வது 'சிந்தனை சாரல்' நிகழ்ச்சி நடந்தது. திருவொற்றியூர் கிளை நுாலகம் வாசகர் வட்டத்தின் 95வது சிந்தனை சாரல் நிகழ்ச்சியில், முதுகலை தமிழாசிரியர் சந்தோஷ்குமார், சிறப்பு பேச்சாளராக பங்கேற்று, 'தமிழ் இலக்கியமும் - தமிழர் வாழ்வும்' என்ற தலைப்பில் பேசியதாவது: அன்றைய காலத்தில், போர் அறம் பேரறமாக இருந்தது. சூரியன் உதித்த பின்பே போர் நடந்தன. இன்று, இரவில் சர்வசாதாரணமாக போர்கள் நடக்கின்றன. அன்றைய காலத்தில் காதலில் கூட அறம் இருந்தது; இன்று கிடையாது. இல்லறம் நல்லறமின்றி போகிறது. அறம், அறிவியல் உணர்ச்சியோடு தமிழன் வாழ்ந்தான் என்பதற்கு, தொல்காப்பியம் ஒன்றே சிறந்த சான்று. இவ்வாறு, அவர் பேசினார். இந்நிகழ்ச்சியில், வாசகர் வட்ட நிர்வாகிகள் துரைராஜ், சுப்பிரமணி, மதியழகன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !