உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்

முதல்வர் வருகைக்காக காத்திருக்கும் திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்

திருவொற்றியூர்:திருவொற்றியூர் குப்பம் பகுதியில், 68 ஏக்கர் பரப்பளவில் சூரை மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டிற்கு 60,000 டன் மீன்கள் கையாள முடியும் என தெரிகிறது. மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள், மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியான, 272 கோடி ரூபாய் செலவில் 2019ல் துவங்கியது.இதில், தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் அலை தடுப்புச்சுவர் மற்றும் சிறிய - பெரிய படகுகள் அணையும் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 800 படகுகள் நிறுத்த முடியும். மேலும், மீன் ஏலக்கூடம், வானொலி கோபுரம், மீனவர்கள் ஓய்வறை, கழிப்பறை, உணவு கூடம், பார்க்கிங் யார்டு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.பணிகள் முடிந்தநிலையில், திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம் திறப்பு விழா ஏற்பாடுகள், ஏற்கனவே மூன்று முறை நடந்தன.ஆனால், பல்வேறு காரணங்களால் திறப்பு விழா தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் முடிந்து, நாட்கள் பல கடந்த நிலையிலும், திறப்பு விழாவிற்கான எந்த அறிகுறியும் இல்லை.சூரை மீன்பிடித்துறைமுகத்தை, உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.முதல்வர் நாள் ஒதுக்காததால், பணி முடிந்தும் திறக்கப்படாமல் உள்ள திருவொற்றியூர் சூரை மீன்பிடி துறைமுகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

lana
மே 19, 2025 13:11

அவருக்கு வெட்டி video வெளியிட நேரம் இருக்கிறது வெட்டியா ஜனாதிபதி க்கு advise பண்ண நேரம் இருக்கிறது. இதுக்கெல்லாம் நேரம் இல்லை


சமீபத்திய செய்தி