இது புதுசு
புத்தக காட்சியில் இந்தாண்டு புது முயற்சியாக, வாசகர்கள் ஓய்வெடுப்பதற்காக தனி இடம் ஒதுக்கியுள்ளனர். இருக்கைகளுடன் கூடிய இதில், வாசகர்கள் அமர்ந்து இளைப்பாறுவதுடன், வாங்கிய புத்தகங்கள் குறித்து விலாவரியாக பேசுகின்றனர். கண்காட்சியில் வாங்கும் புத்தகங்கள் 10 சதவீதம் தள்ளுபடி என்றாலும், சில அரங்குகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடி தரப்படுகிறது. சிறைவாசிகள் படிக்க புத்தகம் தர விரும்புவோருக்கு, ஒரு அரங்கு இருக்கிறது. இங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் புத்தகங்களை போட்டால், அது சிறைவாசிகளின் கைகளில் எட்டிவிடும்.