மேலும் செய்திகள்
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த இருவர் கைது..
28-Sep-2024
கோடம்பாக்கம்:மின்வாரிய ஊழியரிடம் பணம் பறித்த இருவரை, போலீசார் கைது செய்தனர். கோடம்பாக்கம் காமராஜர் காலனி, ஏழாவது தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 38; மின்வாரிய ஊழியர். நேற்று முன்தினம், தங்கையை ஊருக்கு வழியனுப்ப கோயம்பேடு செல்ல, ஆட்டோ பிடிக்க வீட்டின் அருகே நடந்து சென்றார். அப்போது, பின்னால் வந்த இரண்டு பேரில் ஒருவர், சரவணனை பின்பக்கமாக இறுக்கமாக பிடித்துக் கொள்ள, மற்றொருவர் அவரது பேன்ட் பாக்கெட்டில் இருந்த, 1,000 ரூபாயை எடுத்துள்ளார்.பின், சரவணனை கீழே தள்ளி விட்டு, தப்பிச் சென்றனர். இதுகுறித்த புகாரின்படி, பணம் பறித்த அம்பத்துார் ஒரகடத்தைச் சேர்ந்த அபினாஷ், 24, குன்றத்துாரைச் சேர்ந்த செல்வகுமார், 20, ஆகிய இருவரை, கோடம்பாக்கம் போலீசார் கைது செய்தனர்.பல வழக்கில் தொடர்புள்ள இவர்களிடம் இருந்து கத்தி, பைக் பறிமுதல் செய்யப்பட்டன.
28-Sep-2024