உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

மூதாட்டி வீட்டை அபகரித்தோர் கைது

பேசின்பாலம்:சென்னை திருமுல்லைவாயில், முல்லை நகர் ஆறாவது தெருவைச் சேர்ந்தவர் குருவம்மாள், 57. இவருக்குச் சொந்தமான வீடு புளியந்தோப்பு, கே.பி.பார்க்கில் உள்ளது.அவர் இந்த வீட்டை, அதே பகுதியைச் சேர்ந்த பழைய குற்றவாளிகளான அஸ்கர் அலி, 39, சுரேஷ், 49, ஆகியோர் வாயிலாக, சரளா என்பவருக்கு, 5,000 ரூபாய் மாத வாடகைக்கு விட்டிருந்தார்.சில மாதமாக வாடகை வராததால், அங்கு சென்று பார்த்த போது, வீட்டில் வேறு நபர் குடியிருந்தார். அவரிடம் விசாரித்த போது, அஸ்கர் அலி, சுரேஷ் சேர்ந்து, போலி ஆவணம் வாயிலாக, 2 லட்சம் ரூபாய்க்கு 'லீசு'க்கு விட்டது தெரிந்தது.இதுகுறித்து அவர்களிடம் கேட்ட போது, குருவம்மாளை மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரை விசாரித்த பேசின்பாலம் போலீசார், மேற்கண்ட இருவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ