மனு அளிக்க சென்றோர் கைது
காஞ்சிபுரம், காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் கிராமத்தில், பரந்துார் விமான நிலையம் அமைவதற்கு, கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு போராட்டங்களை செய்து வருகின்றனர்.பரந்துார் விமான நிலையத்திற்கு, ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்களை எடுக்க, தமிழக தொழில் வளர்ச்சி கழகம், செப்., மாத துவக்கத்தில் அறிவிப்பு வெளியானது. இதை கண்டித்து, ஏகனாபுரத்தில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்படுகிறது.நேற்று மாலை, காஞ்சிபுரத்தில் நடந்த பவள விழாவில் பங்கேற்ற, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து மனு அளிக்க, ஏகனாபுரம் கிராமத்தினர் புறப்பட்டனர்.அவர்களை தடுத்து, சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனர்.