மேலும் செய்திகள்
போதை பொருளுடன் சுற்றிய கர்நாடக வாலிபர் கைது
01-Apr-2025
டி.பி., சத்திரம், செனாய் நகர் புல்லா அவென்யூ அருகில் போதைப்பொருள் விற்பதாக கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனருக்கு தகவல் கிடைத்தது.ஸ்கேட்டிங் பார்க் அருகில் டி.பி.,சத்திரம் போலீசார் கண்காணித்தபோது சந்தேகத்தின் அடிப்படையில் மூவரை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் 8 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் இருப்பது தெரிந்தது.இது தொடர்பாக தரமணியை சேர்ந்த பாயாஸ் அகமது, 26, தி.நகர் நீலாங்கரை தெருவை சேர்ந்த தமீம் அன்சாரி, 27, சாலிகிராமத்தை சேர்ந்த முகமது நுாருதீன், 25 ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த போதைப் பொருளை பறிமுதல் செய்தனர்.***
01-Apr-2025