போதை மாத்திரை வைத்திருந்த மூவர் கைது
சென்னை, எழும்பூர் ஆய்வாளர் தலைமையிலான போலீசார் நேற்று காலை எத்திராஜ் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்ததில், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். அவர்களது உடமைகளை போலீசார் சோதனை செய்தனர். இதில், 590 போதை மாத்திரைகள் வைத்திருந்தது தெரிந்தது. தொடர் விசாரணையில் அவர்கள் அண்ணாசாலையைச் சேர்ந்த முகமது முசரப், 21, முகமது நவாஸ், 20, சுகைல் பாஷா, 22 என்பது தெரிந்தது.அவர்களை கைது செய்த போலீசார், மாத்திரைகள், 3 மொபைல்போன்கள், இருசக்கர வாகனம் ஒன்றை பறிமுதல் செய்தனர்.