உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாடு திருடிய மூவர் கைது 

மாடு திருடிய மூவர் கைது 

ஆவடி, திருமுல்லைவாயில், வெங்கடேஸ்வரா நகரைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன், 33. இவர், கடந்த 5ம் தேதி இரவு தனது காளை மாட்டை வீட்டு வாசலில் கட்டியிருந்தார். மறுநாள் காலை காளை மாடு திருடு போனது. புகாரின் படி, திருமுல்லைவாயில் போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அம்பத்துாரைச் சேர்ந்த நிர்மல் குமார், 29, அயப்பாக்கத்தை சேர்ந்த ராஜு, 26, செல்வகுமார், 23 ஆகியோர், காளை மாட்டை சிறிய சரக்கு வாகனத்தில் ஏற்றி சென்றது தெரிந்தது. போலீசார், மூவரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து காளை மாடு, வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கோகுல்ராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை