உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மெட்ரோ பணி இரும்பு திருடிய மூவர் கைது

மெட்ரோ பணி இரும்பு திருடிய மூவர் கைது

ராயப்பேட்டை, சென்னை, ராயப்பேட்டை, ஸ்ரீராம் முதல் தெருவில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகின்றன. இங்கு, இரவு நேரங்களில் இரும்பு பொருட்கள் திருடு போவதாக தெரியவந்தது. மயிலாப்பூரை சேர்ந்த மெட்ரோ ரயில் அதிகாரி பார்த்திபன், 52 என்பவர், ராயப்பேட்டை போலீசில் இது தொடர்பாக புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து, நேற்று கோட்டூர்புரத்தைச் சேர்ந்த மோகன்,52, லட்சுமணன்,29, அர்ஜூன்குமார்,21, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் 150 கிலோ இரும்பு பொருட்களை திருடியது விசாரணையில் தெரிந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை