உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கத்தியை காட்டி தகராறு ரவுடி உட்பட மூவர் கைது

கத்தியை காட்டி தகராறு ரவுடி உட்பட மூவர் கைது

குன்றத்துார், சோமங்கலம் அருகே கத்தியை காட்டி மிரட்டி, தகராறு செய்த பிரபல ரவுடி மேத்யூ உள்ளிட்ட மூன்று பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.குன்றத்துார் அருகே சோமங்கலம் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மேத்யூ, 34. சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது, ஏழு கொலை வழக்குகள் மற்றும் கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, எருமையூர் பகுதியில் நடந்த சுப நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த இருவரிடம், மேத்யூ மற்றும் இவரது கூட்டாளிகள் செந்தமிழ்செல்வன், 28, கருணாகரன், 21, ஆகியோர், மது போதையில் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்தனர்.இதையடுத்து, சோமங்கலம் போலீசார், நேற்று மேத்யூ, செந்தமிழ்செல்வன், கருணாகரன் ஆகிய மூவரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். ஒரு நாட்டு துப்பாக்கி, மூன்று பட்டாக்கத்தி ஆகியவற்றை, போலீசார் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி