உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அந்தமான் ஹோட்டல் அதிபர் கொலை வழக்கில் தொழில் கூட்டாளி உட்பட மூன்று பேர் கைது

அந்தமான் ஹோட்டல் அதிபர் கொலை வழக்கில் தொழில் கூட்டாளி உட்பட மூன்று பேர் கைது

சென்னை, அந்தமான் - நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்த ஹோட்டல் அதிபர், சென்னை அருகே கொல்லப்பட்ட வழக்கில், அவரது தொழில் கூட்டாளி உட்பட மூன்று பேரை போலீ சார் கைது செய்தனர். அந்தமான் - நிக்கோபாரின் ஷாதிப்பூரைச் சேர்ந்தவர் நியாமத் அலி, 49. இவர், அப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். கடந்த ஜூலை 27ம் தேதி, வியாபார நிமித்தமாக சென்னைக்கு வந்தார். அன்று மாலை, நியாமத் அலியை, அவரது மனைவி மொபைல் போனில் தொடர்பு கொள்ள முடியாததால், சந்தேகம் அடைந்து, அந்தமான் - நிக்கோபார் போலீசில் புகார் அளித்தார். வழக்கு பதிந்த அந்தமான் போலீசார், சென்னை போலீசாரின் உதவியுடன், நியாமத் அலியை தேடும் பணியை தீவிரப்படுத் தினர். அன்றைய தினம், சென்னை விமான நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். பின், மொபைல் போனை ஆய்வு செய்ததில், சென்னை வண்டலுாரில் உள்ள கல்லுாரி மாணவனுடன், நியாமத் அலி இறுதியாக பேசியதை போலீசார் கண்டறிந்தனர். இதைத்தொடர்ந்து, அம்மாணவனிடம் விசாரணை நடத்தினர். இதில், மூன்று பேருடன் நியாமத் அலி காரில் சென்றதாகவும், அதன்பின் அவர் மாயமானதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது தொழில், நட்பு வட்டத்திலும் போலீசார் விசாரித்தனர். இதில், நியாமத் அலியின் தொழில் கூட்டாளி முன்டாகுயிம் அகமது, 31, உட்பட அவருக்கு உதவிய இரண்டு பேர் என மொத்தம் மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். ஹோட்டல் தொழிலில், அதிக லாபம் ஈட்ட எண்ணிய அகமது, நியாமத் அலியை, காரில் அழைத்து சென்று மயக்கம் மருந்து கொடுத்து, கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின், அந்த காரில் ஒடிசா மாநிலம், ரூர்கேலாவுக்கு உடலை எடுத்துச்சென்று, ஒதுக்குபுறமான இடத்தில், பாறாங்கற்களுடன் கூடிய சாக்கில் வைத்து, அருகே உள்ள ஆற்றில் வீசியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, நியாமத் அலியின் உடலை கண்டறிய, அந்தமான் போலீசார் ரூர்கேலாவுக்கு விரைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை