உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது

போதை பொருள் வைத்திருந்த மூவர் கைது

சென்னை, நுங்கம்பாக்கம், கல்லுாரி சாலையில் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப்பிரிவு போலீசார் நேற்று, கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக நின்ற மூவரை பிடித்து விசாரித்தனர். அப்போது, விழுப்புரத்தைச் சேர்ந்த ராம்சந்தர், 34, திண்டுக்கல் கார்த்திக்ராஜா, 27, நாகை முகமது ஜெக்பர் சாதிக், 24 என்பதும், போதைப் பொருள் விற்பதும் தெரிய வந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 6 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள், 26 சிரஞ்சிகள், 12,000 ரூபாய், மூன்று மொபைல் போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ