உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கத்தியுடன் பைக்கில் சுற்றிய மூன்று வாலிபர்கள் கைது

 கத்தியுடன் பைக்கில் சுற்றிய மூன்று வாலிபர்கள் கைது

பள்ளிக்கரணை: சேலையூர் போலீஸ்காரர் சுவாமிநாதன், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, பணி முடிந்து பள்ளிக்கரணையில் உள்ள தனது அறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சந்தேகப்படும்படி 'டியோ' ஸ்கூட்டரில் சென்ற மூவரை மடக்கி பிடித்து விசாரித்தார். அவர்களின் பைக்கில், கத்தி இருந்தது. தகவலின்படி, அங்கு வந்த பள்ளிக்கரணை போலீசார், பள்ளிக்கரணையைச் சேர்ந்த முகேஷ், 18, மணிகண்டன், 19, மேடவாக்கத்தை சேர்ந்த ஷாருக்கான், 19, ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கத்தி, இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ