உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ப்ளூ ஸ்கை கிரிக்கெட் லீக் போட்டி டைகர் ரீயுனைடெட் அணி வெற்றி

ப்ளூ ஸ்கை கிரிக்கெட் லீக் போட்டி டைகர் ரீயுனைடெட் அணி வெற்றி

சென்னை: ப்ளூ ஸ்கை கிரிக்கெட் லீக் போட்டியில், டைகர் ரீயுனைடெ்ட அணி, ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ப்ளூ ஸ்கை கிரிக்கெட் அகா டமி சார்பில், மதன்ராஜ் லீக் கோப்பைக்கான கிரிக் கெட் போட்டிகள், சேத்துப்பட்டில் நடக்கின்றன. போட்டியில், எட்டுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று, லீக் முறையில் மோதி வருகின்றன. நேற்று முன்தினம் நடந்த போட்டியில், டைகர் ரீயுனைடெட் மற்றும் பிரேக்ஸ் இந்தியா லிமிடெட் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற டைகர் ரீயுனைடெட் அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட் செய்த பிரேக்ஸ் இந்தியா அணி, நிர்ணயிக்கப் பட்ட 25 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் அடித்தது. அடுத்து விளையாடிய, டைகர் ரீயுனைடெட் அணி, 20.4 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு, 155 ரன்களை அடித்து வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில், டாஸ் வென்ற ஸ்கார்பியன் சி.சி., அணி முதலில் பேட் செய்து, 25 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 200 ரன்களை அடித்தது. அடுத்து களமிறங்கிய எட்வர்ட் லெவன்ஸ் சி.சி., அணி, 17.3 ஓவர்களில் 70 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது. இதனால், 130 ரன்கள் வித்தியாசத்தில், ஸ்கார்பியன் சி.சி., அணி வெற்றி பெற்றது. போட்டி கள் தொடர்ந்து நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ