மேலும் செய்திகள்
இன்று இனிதாக (06.09.2025)
06-Sep-2025
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருமங்கையாழ்வார் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருவாரதனம்- - இரவு 8:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனை - காலை 9:00 மணி. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம். வியாச விநாயகர் கோவில் மண்டல பூஜை - காலை 9:00 மணி. சிறப்பு அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: விநாயகர் கோவில் தெரு, கதிர்வேடு. சித் சபா மணிக்கூடம் திருவாசகம் முற்றோதல் - காலை 7:00 மணி. இடம்: மல்லிகேஸ்வரர் நகர், பள்ளிக்கரணை. சீனிவாச பெருமாள் கோவில் கம்பராமாயணம்: தேரழுந்துார் புலவர் அரங்கராசன் - மாலை 6:30 மணி. இடம்: ஆஞ்சநேயர் கோவில், ஜல்லடியன்பேட்டை. நரசிம்ம பெருமாள் கோவில் உபன்யாசம்: அம்பரீஷ் சரித்திரம் - சேங்காலிபுரம் பி.தாமோதர தீட்சிதர் - மாலை 6:30 மணி. இடம்: பிரசன்ன வெங்கட நரசிம்ம பெருமாள் கோவில், ரகுநாதபுரம், மேற்கு சைதாப்பேட்டை. நாம சங்கீர்த்தனம் நாம சங்கீர்த்தனம்: தாசரதி குழுவினர் - மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை. பொது இலவச மருத்துவ முகாம் ரோட்டரி கிளப் ஆப் சென்னை விகாஷ் சார்பில், இலவச மருத்துவ மற்றும் பல் பரிசோதனை முகாம்- - காலை 10:00 மணி. இடம்: ஸ்கேட்டிங் கிரவுண்டு, 100 அடி சாலை, நங்கநல்லுார். புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர். இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்தபடி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு - -காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லப்பாக்கம். இலவச சட்ட விழிப்புணர்வு அறவழி சட்ட உதவி மன்றம் நடத்தும் இலவச சட்ட விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம். காலை 10:00 மணி முதல் 1:00 மணி வரை. இடம்: எஸ்.எஸ்., மஹால், துலுக்கானத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை. கைவினைப்பொருள் விற்பனை வித்யாசாகர் சிறப்பு குழந்தைகளுக்கான பள்ளி நடத்தும், 'நம்ம பசங்க அங்காடி' - கைவினைப்பொருட்கள் விற்பனை நிகழ்ச்சி - காலை 11:00 முதல் இரவு 7:00 வரை. இடம்: வித்யாசாகர் பள்ளி வளாகம், ரஞ்சித் சாலை, கோட்டூர்புரம். நுால் வெளியீட்டு விழா ராணி மைந்தன் - 80, 'வந்த பாதை - ஒரு பார்வை' நுால் வெளியீட்டு விழா - மாலை 6:15 மணி. இடம்: திருவள்ளுவர் அரங்கம், தி இண்டியன் ஆபீசர்ஸ் அசோசியேஷன் கட்டடம், 69, திரு.வி.க., நெடுஞ்சாலை, ராயப்பேட்டை.
06-Sep-2025