உள்ளூர் செய்திகள்

இன்று இனிதாக

ஆன்மிகம் வேங்கீஸ்வரர் கோவில்  சிறுவாபுரி ஆடிக் கிருத்திகை பாத யாத்திரை குழுவினர் புறப்பாடு, மாலை 4:30 மணி. இடம்: வடபழனி. ஏகதின திவ்ய பிரபந்த பாராயணம்  அருளிச்செயல் கைங்கர்ய சபா சார்பில் பாராயண நிகழ்ச்சி, காலை 8:30 மணி முதல், இடம்: மிதிலாபுரி கல்யாண மண்டபம், மூர்த்தி தெரு, மேற்கு மாம்பலம். ஜெய் பிரத்யங்கிரா பீடம்  அஷ்டமி நடுநிசி ஹோமம், இரவு 9:00 மணி முதல் அதிகாலை வரை. இடம்: வெண்பாக்கம் மலையடிவாரம், சிங்கபெருமாள் கோவில் வழி, வெங்கடாபுரம். ஓம் கந்தாஸ்ரமம்  மாதா புவனேஸ்வரிக்கு ஆடி வெள்ளி அபிஷேகம், காலை 10:30 மணி, சர்க்கரை காப்பு அலங்காரம், நவாவர்ண பூஜை, மாலை 6:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர். நாகாத்தம்மன் கோவில்  ஆடி திருவிழா, அம்மன் குடம் ஊர்வலம், மதியம் 12:00 மணி, தெருக்கூத்து, இரவு 12:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை. சிவசுப்ரமணிய சுவாமி கோவில்  சுக்ரவார அபிஷேகம், காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம், மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை. பொது கண் பரிசோதனை முகாம்  ஸ்ரீநிவாஸ் இளைஞர்கள் நற்பணி சங்கம் சார்பில், இலவச கண்பரிசோதனை முகாம், காலை 8:00 மணி. இடம்: சைமா மெடிக்கல் சென்டர், தேரடி தெரு, திருவல்லிக்கேணி. கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி  பூம்புகார் நிறுவனம் சார்பில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி, காலை 10:00 மணி, இடம்: பூம்புகார் விற்பனை நிலையம், அண்ணா சாலை. காந்தி சில்ப் பஜார்  கைவினை மற்றும் கைத்தறி துணிகளின் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர்கோட்டம் நெடுஞ்சாலை, நுங்கம்பாக்கம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ