மேலும் செய்திகள்
இன்று இனிதாக: சென்னை
13-Nov-2026
ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாளுக்கு மண்டபத்தில் திருமஞ்சனம்-, காலை 9:30 மணி; பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு-, மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா-, மாலை 4:30 மணி; சிங்காரவேலர் விடையாற்றி, நான்காம் நாள் உத்சவம்-, மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர். முருகன் கோவில் மகா கந்தசஷ்டி விழா 11ம் நாள் விழாவை முன்னிட்டு, அருணகிரி நாதர் புறப்பாடு,-இரவு 8:30 மணி. இடம்: வடபழனி. பொது பருத்தி ஆடைகள் கண்காட்சி ‘காட்டன்பேப்’ எனும் பெயரில் பருத்தி, கைத்தறி, பாரம்பரிய பட்டு ஆடைகள் கண்காட்சி, -காலை 10:30 மணி. இடம்: மந்திரா கார்டன், நந்தனம். விண்வெளி துறை கண்காட்சி பாதுகாப்பு மற்றும் விண்வெளி துறை சார்ந்த மாநாடு மற்றும் கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம். கலாசார விழா நடனம், இசை, குறும்படம் உள்ளிட்ட நிறுவன ஊழியர்களுக்கான கலாசார போட்டி-, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
13-Nov-2026